மீண்டும் இணையும் வடிவேலு – பஹத் பாசில் கூட்டணி!
மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வடிவேலு மறும் பஹத் பாசில் கூட்டணி கைகோர்க்கவிருக்கிறது.
ஆம், அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
இப்படம், முழுக்க முழுக்க காமெடி கதைகளத்தைச் சுற்றி நடக்கவிருக்கிறதாம். படத்தில் இன்னும் பெரிய நட்சத்திரங்களும் இணையவிருக்கிறார்களாம்.
2024ல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.