அருண் விஜய்யை வைத்து முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பாலா!

 அருண் விஜய்யை வைத்து முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பாலா!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், சூர்யாவிற்கும் பாலாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டது இப்படம்.

தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அருண் விஜய்யை வைத்து வெற்றிகரமாக வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குனர் பாலா.

அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post