2024 கோடை விடுமுறையை குறி வைக்கும் “விடுதலை”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”.

படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை அடுத்தவருடம் அதாவது 2024ல் கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இன்னும் சிறிது நாட்களே படப்பிடிப்பு நடத்தவிருப்பதால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை விரைவில் முடித்து படத்தினை திரைக்கு கொண்டு வர இருக்கிறார்களாம்.

Related post