வாரிசு வெற்றிபெற “தோப்புகரணம்” போட்ட விஜய் ரசிகர்கள்!

 வாரிசு வெற்றிபெற “தோப்புகரணம்” போட்ட விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க நாளை மறுதினம் திரையரங்கிற்கு வர இருக்கும் திரைப்படம் தான் வாரிசு.

படத்தின் இறுதிகட்ட ப்ரொமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது படக்குழு.

ரசிகர்களும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை, கட் அவுட், போஸ்டர் என வாரிசு படத்தினை ப்ரொமோட் செய்யும் பணிகளில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ரசிகர்கள் திரண்டனர். வாரிசு திரைப்பட போஸ்டருடன் வந்தவர்கள் மயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், படம் வெற்றி பெற வேண்டி வழிபாடும் நடத்தினர்.

 

Related post