ட்விட்டரில் தளபதி விஜய்யின் அம்மா.?

இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்த தளபதி விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர், தற்போது முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார்.
அதுவும் தன்னுடைய முதல் பதிவு, மகனை குறிப்பிட்டு தான் போட்டுள்ளார். இதற்க்கு தான் விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்று வருகிறார்கள்.
தன்னுடைய மகன் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, டுவிட்டரில் இணைந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், எனது அன்பு மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது மேலும் மகிழ்ச்சி ஷோபா தனது ட்டிவிட்டில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருவதோடு, பலர் தளபதியின் தாயார் ஷோபாவை ட்விட்டரில் பின்தொடர துவங்கியுள்ளனர்.
இப்படி இவர் ட்விட்டர் பக்கத்தில் இணைந்த 10 மணிநேரத்தில் சுமார், மூன்றாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்தாலும் இது உண்மையாகவே விஜய் அம்மா ட்விட்டர் தானா என்ற சந்தேகமும் எழத் துவங்கியிருக்கிறது.