வெளியீட்டு தேதி குறித்த விருமன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்!

 வெளியீட்டு தேதி குறித்த விருமன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”.

இப்படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 3 ஆம் தேதி மதுரையில் மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில், விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை நேற்று படக்குழு அறிவித்தது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்கை ஆக்கிரமிக்க வருகிறது. பெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்கு நிலவி வருவதால் அதிகமான எண்ணிக்கையில் இப்படம் திரையிடப்படும் என தெரிகிறது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related post