சமபந்தி கறி விருந்து அளித்த விஷால்!

 சமபந்தி கறி விருந்து அளித்த விஷால்!

இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் விஷால்34.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் தீபாவளி தினமான நேற்றும் படப்பிடிப்பு நடைப்பெற்றது.

இந்நிலையில், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது.

நடிகர் விஷால் படப்பிடிப்பில் எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை கடைநிலை ஊழியர் தொடங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை வழக்கமாக வைத்து வருகிறார்.

 

Related post