தனுஷ் படத்திலிருந்து விலகலா!? விளக்கம் கொடுத்த விஷ்ணுவிஷால்!

 தனுஷ் படத்திலிருந்து விலகலா!? விளக்கம் கொடுத்த விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் அடுத்ததாக தனுஷ் இயக்கி நடிக்கும் “டி50” படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அதில், “நான் “டி50” படத்தில் நடிக்கிறேன் என்று வரும் வதந்திகளில் எந்த வித உண்மையும் இல்லை. ஆனாலும், அந்த படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்கவேண்டியிருப்பதால், அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

 

Related post