ட்ரெண்டெங்கில் 1 மில்லியன்… இணையத்தை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்!

 ட்ரெண்டெங்கில் 1 மில்லியன்… இணையத்தை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்!

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “லியோ”.

இப்படம் சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய்யின் பேச்சு பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் லியோ சக்ஸஸ் மீட் என்ற டேக் சுமார் 1 மில்லியனை கடந்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Related post