லியோ ஆடியோ லான்ஞ்; ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு!

 லியோ ஆடியோ லான்ஞ்; ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லியோ”. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

வரும் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திற்கு 200 பேர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல், வருபவர்கள் அவர்களது சொந்த வாகனத்தில் தான் வர வேண்டுமாம்.

அரங்கத்திற்கு வெளியே பேனர் வைக்கவும் அனுமதி இல்லை என ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post