மீண்டும் சுதா கொங்கராவோடு கைகோர்க்கும் சூர்யா!?
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவோடு மீண்டும் நடிக்கவிருக்கிறார் சூர்யா என்ற செய்தி கோலிவுட்டில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
நடிகர் சூர்யா கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
வாடிவாசல் படம் ஆரம்பிக்கும் முன்பு குறுகிய காலக்கட்டத்தில் எடுக்கப்படும் படமாக அது இருக்கும் என்கிறார்கள்.
அதற்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.