5 நாட்களில் 200 கோடி; வசூல் மழையில் விக்ரம்!

 5 நாட்களில் 200 கோடி; வசூல் மழையில் விக்ரம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”.

இப்படத்தில் விஜய் சேதுபதி , பஹத் பாசில் மற்றும் சூர்யா நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.

5 மொழிகளிலும் நல்ல வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த வருடம் வெளியான படங்களில் குறைந்தநாட்களில் 200 கோடி வசூல் மழை செய்திருப்பது விக்ரம் மட்டுமே என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.

Related post