தலைவர் 171” முடித்ததும் உடனே கைதி 2 தான் – லோகேஷ் கனகராஜ்!

 தலைவர் 171” முடித்ததும் உடனே கைதி 2 தான் – லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். வரும் 19 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படமாக, ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லியோ ரிலீஸ் ஆனதும், தலைவர் 171 படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கவிருப்பதாக கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தலைவர் 171 படத்தினை முடித்த கையோடு உடனடியாக கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருப்பதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

கைதி 2 படத்தின் கதை முழுவதையும் முடித்து வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பினை முடித்ததும் உடனே கைதி 2 படத்தினை உருவாக்க ஆவலாக இருப்பதாக, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related post