அட்லீயின் ஜவான் படத்தின் கதையும் திருட்டுக் கதையா.? புகார்

ஷாருக்கான், விஜய் சேதுபதி என நட்சத்திர ஜாம்பவான்கள் நடித்து வரும் படம் தான் ஜவான்.
இப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது.
படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் திரைப்பட சங்கத்தில் இயக்குனர் அட்லீ மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், அட்லீ இயக்கி வரும் தவான் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு படத்தின் கதை என அப்படத்தின் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அட்லீயின் கதை சர்ச்சை ஒவ்வொரு படத்திற்கும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனை தான்.