அட்லீயோடு இணையும் சிவகார்த்திகேயன்!

 அட்லீயோடு இணையும் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ.

விஜய்சேதுபதி இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறாராம் அட்லீ.

இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தாங்கள் கமிட் ஆன படங்களை முடித்ததும் இவர்கள் இணையும் படம் உருவாகும் எனத் தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்…

 

Related post