அதிக திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் “அயலான்”
இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. படத்தின் க்ராபிக்ஸ் பணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டாலும், படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்.
இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் அயலான் திரைப்படம் அதிக நாடுகளில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இதனால், படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வரும் பொங்கல் தின விடுமுறை வெளியீடாக குழந்தைகளை கவரக் கூடியதாக படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.