6 நாட்களில் 400 கோடி; அதிரி புதிரி வசூலில் “ஜெயிலர்”!

 6 நாட்களில் 400 கோடி; அதிரி புதிரி வசூலில் “ஜெயிலர்”!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.

படம் மிகப்பெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், கடந்த 6 தினங்களில் மட்டும் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 416 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு வசூல் நிலவரம் இங்கே:

Day 1 – ₹ 95.78 cr
Day 2 – ₹ 56.24 cr
Day 3 – ₹ 68.51 cr
Day 4 – ₹ 82.36 cr
Day 5 – ₹ 49.03 cr
Day 6 – ₹ 64.27 cr
Total – ₹ 416.19 cr

தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், படத்தின் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post