பொன்னியின் செல்வன் படத்தோடு மோத முடிவெடுத்த தனுஷ்!

 பொன்னியின் செல்வன் படத்தோடு மோத முடிவெடுத்த தனுஷ்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்துஜா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே தேதியில் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் “பொன்னியின் செல்வன் 1” படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post