2000 ஆண்டு வலியை கூறுவதில் என்ன தவறு.? – மாமன்னன் குறித்து இயக்குனர் அமீர் பளீச்!

 2000 ஆண்டு வலியை கூறுவதில் என்ன தவறு.? – மாமன்னன் குறித்து இயக்குனர் அமீர் பளீச்!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்தது இந்த மாமன்னன்.

இப்படம் வெளியான பிறகு பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் அமீரும் இந்த படம் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

அதில், “திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வது தமிழகத்தில் திராவிட கருத்துக்களாக இருந்தாலும், பெரியாரின் கருத்துக்களாக இருந்தாலும் திரைப்படங்கள் மூலமாகத்தான் கொண்டுவரப்பட்டது தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

அதில் மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை அந்த சமூகத்தினர் ஒரு 2000 ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரையின் மூலமாக சொல்ல முயற்சி செய்கிறார் அதே உரிமை அனைவருக்கும் உள்ளது மக்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த கருத்தை சொல்லக்கூடாது என்பதல்ல. இது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாக தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.” என்று கூறியுள்ளார்.

 

Related post