போலி “லியோ” டிக்கெட்டுகள்; ரசிகர்களே உஷார்!

 போலி “லியோ” டிக்கெட்டுகள்; ரசிகர்களே உஷார்!

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் லியோ.

வரும் 19ம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் பிசினஸ் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் இருக்கக்கூடிய ப்ரியா சினிமாஸ் திரையரங்கம் அதிர்ச்சிகரமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், எங்கள் திரையரங்கின் பெயரில் போலியான லியோ படத்தின் டிக்கெட் பரப்பப்படுவதாகவும், லியோ படத்தின் டிக்கெட் புக்கிங்க் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, விஜய் ரசிகர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், இந்த மாதிரியான போலி டிக்கெட்டுகளுக்கு திரையரங்கம் பொறுப்பேற்காது என்றும் கூறியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related post