குறித்த நாளில் தான் “லியோ” ரிலீஸ் ஆகும்.. அடித்து கூறிய லலித்!

 குறித்த நாளில் தான் “லியோ” ரிலீஸ் ஆகும்.. அடித்து கூறிய லலித்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. வரும் 19 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், படம் 18 ஆம் தேதி மாலை வெளிவரும் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அப்படியான எந்த திட்டமும் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி 19 ஆம் தேதி காலை படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது லியோ பட தயாரிப்பு குழு.

அதற்காக மட்டுமே படக்குழு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வீண் வதந்திகளை நம்பி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Related post