மாஸ் கிளப்பிய மாமன்னன்… முதல் நாள் வசூல் நிலவரம்!

 மாஸ் கிளப்பிய மாமன்னன்… முதல் நாள் வசூல் நிலவரம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன்.

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இப்படம் சுமார் 700 திரையரங்குகளில் வெளியானது.

வெளியான முதல்நாளில் மொத்தமாக சுமார் 6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உதயநிதியின் சினிமா கேரியரில் முதல் நாள் வசூல் 6 கோடி என்பது இதுவே முதல் முறை.

தொடர்ந்து பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

Related post