இணையத்தை கலக்கும் “ஃபைட் கிளப்” டீசர்

 இணையத்தை கலக்கும் “ஃபைட் கிளப்” டீசர்

அறிமுக இயக்குனரும் இயக்குனர் விஜய் குமாரின் உதவியாளரான அப்பாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”.

இப்படத்தில் ஹீரோவாக விஜய் குமார் நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படைப்பாக இதனை தயாரித்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் டீசர் 4 தினங்களுக்கு முன் வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு ஹிட் அடித்து வருகிறது.

மேலும், படத்தின் ஒளிப்பதிவு பலராலும் பாராட்டப்பட்டும் வருகிறது. யூ டியுப்பில் மட்டும் இதுவரை சுமார் 42 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது இதன் டீசர். வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related post