கமல் படத்திற்கு இசையமைக்கும் ஹரீஸ் ஜெயராஜ்!

 கமல் படத்திற்கு இசையமைக்கும் ஹரீஸ் ஜெயராஜ்!

விக்ரம் படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக ஹச் வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறார்.

இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post