உலக அளவின் 200 கோடி; அசர வைக்கும் ஜெயிலர் பட வசூல்!!

 உலக அளவின் 200 கோடி; அசர வைக்கும் ஜெயிலர் பட வசூல்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படம் கடந்த வியாழன் அன்று வெளியானது.

அதிக எதிர்பார்ப்போடு வெளியான ஜெயிலர், அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக படமும் அமைந்தது. இதனால், திரையரங்கிற்கு மக்கள் படையெடுத்தனர். தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியான வியாழனை விட, நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமானதால் வசூலும் அதிகரித்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை சுமார் 200 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்திருக்கிறது ஜெயிலர்.

இன்னும் ஓரிரு தினங்களில் 300 கோடி வசூலில் ஜெயிலர் இணையும் என்கிறார்கள்.

Related post