ரோலக்ஸ் கன்பார்ம்; சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்!

 ரோலக்ஸ் கன்பார்ம்; சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்திருந்தார். இவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைனில் தனது ரசிகர்களோடு உரையாடிய சூர்யா, விரைவில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி முழு படம் ஒன்று லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா கூறியுள்ளார்.

இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related post