வரலாற்றில் முதல் முறை; ஜெயிலர் படைத்த அசாத்திய சாதனை!

 வரலாற்றில் முதல் முறை; ஜெயிலர் படைத்த அசாத்திய சாதனை!

இயக்குன நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை சுமார் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களிலே முதல் முறையாக வெறும் 7 நாட்களில் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது ஜெயிலர் மட்டுமே என்பது கூடுதல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பைப் இப்படம் பெற்றதால், இன்னமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வசூலை குவித்து வருவதால், ரஜினி ரசிகர்கள் இணையத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post