இணையத்தில் வேகமாக பரவும் “ஜெயிலர்” படத்தின் கதை!

 இணையத்தில் வேகமாக பரவும் “ஜெயிலர்” படத்தின் கதை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் கதை இதுதான் என்று ஒரு சின்ன ஸ்டோரி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது..

அதன்படி, முக்கியக் குற்றவாளி ஒருவர் மத்திய சிறையில் இருக்கிறார். அவர் சிறைக்குள் இருப்பதால் அவரைச் சார்ந்த மற்ற கேங்க்ஸ்டர்களுக்கு பிரச்னை வருகிறது. இதனால், அந்த முக்கியக் குற்றவாளியை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதை ஜெயிலரான ரஜினி எப்படி தடுக்கிறார் என்பதே மீதிக்கதை. என்பது தான் அது…

சமூக வலைதளங்களில் இக்கதை வேகமாக பரவி வருகிறது.

Related post