முன்பதிவில் 50 கோடி; சாதனை நிகழ்த்திய ஜவான்!

 முன்பதிவில் 50 கோடி; சாதனை நிகழ்த்திய ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”.

ஜவான் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி, ஜவான் படத்திற்கு முன்பதிவில் இருந்தே ரூ. 50 கோடிக்கும் அதிக வசூல் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாள் காட்சிக்கு நடைபெற்ற அதிகளவு முன்பதிவு என்ற சாதனையை ஜவான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து முதல் நாள் வசூலில் புதிய சாதனையை ஜவான் நிகழ்த்தும் என்கிறது சினிமா வட்டாரம்.

Related post