அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரள வைத்த “ஜவான்” ட்ரெய்லர்!

 அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரள வைத்த “ஜவான்” ட்ரெய்லர்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”.

இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் வெளியான இதன் ட்ரெய்லர், சினிமா ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையும் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்து காட்சிகளை கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள்.

யூ டியூப் தளத்தில் இதுவரை, தமிழில் 5.4 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 3.1 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 41 மில்லியன் பார்வைகளையும் கடந்திருக்கிறது.

 

Related post