தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன் – எம் எஸ் தோனி!

 தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன் – எம் எஸ் தோனி!

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”.

இப்படத்தினை, தனது முதல் தயாரிப்பாக தயாரித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரன் எம் எஸ் தோனி.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், எம் எஸ் தோனியும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய எம் எஸ் தோனி, “ எனது முதல் டெஸ்ட் போட்டி (2005) சென்னையில்தான் துவங்கியது.

எனது அதிகபட்ச டெஸ்ட் (224) ரன்களும் சென்னையில்தான். தற்போது எனது முதல் படமும் தமிழில் தான். சென்னை எனக்கு எப்போதும் சிறப்பானது. ஐபிஎல் தொடங்கிய பிறகு நான் தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன்.

நமது எல்லோரது வீட்டிலும் மனைவிகள்தான் எஜமான். ஹரிஷ் கல்யாண், மனைவிக்கும் அம்மாவிற்கும் இடையே சாண்ட்விச் போல சிக்கிக் கொண்டு இருப்பதுதான் படம். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்.” என்று கூறினார்.

 

Related post