லியோ; 4 மணி காட்சிக்கெல்லாம் அனுமதி கிடையாது – சென்னை உயர்நீதிமன்றம்!

 லியோ; 4 மணி காட்சிக்கெல்லாம் அனுமதி கிடையாது – சென்னை உயர்நீதிமன்றம்!

லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. படம் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது.

படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுவதால், 4 காட்சிக்கு பதிலாக தினசரி 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்திருந்தது தமிழக அரசு.

அதிகாலை 4 மணி காட்சியும் 7 மணி காட்சியும் தர கோரி தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது.

காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி முதல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

தயாரிப்பு நிறுவன கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளது.

Related post