பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய “கொலை” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய “கொலை” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கொலை”. இயக்குனர் பாலாஜி குமார் இதற்கு முன் விடியும் முன் என்ற படத்தை இயக்கி பலராலும் பாராட்டுகளை பெற்றவர்.

கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், முரளி ஷர்மா, ராதிகா, மீனாட்சி மற்றும் அர்ஜூன் நடித்துள்ளனர்.

மூக்குத்தி அம்மன் படத்திற்கு இசையமைத்த கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இதன் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வித்தியாசமான முறையில் இருந்ததால், பலராலும் பாராட்டப்பட்டது.

இதுவரை சுமார் 50 லட்சம் பார்வைகளை யூ – டியுப் தளத்தில் கடந்துள்ளது கொலை படத்தின் ட்ரெய்லர்.

அதீத எதிர்பார்ப்பினை உண்டாக்கிய இப்படத்தினை வரும் ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

 

Related post