பலத்த எதிர்ப்பு; எச்சரிக்கை வாசகம் வைத்த “லியோ” படக்குழு!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லியோ”.
இப்படத்தின் ”நா ரெடி தான்” என்ற சிங்கிள் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது.
வெளியானது முதல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இருந்தாலும், இப்பாடலின் வரிகளில் மது, புகை என்னும் வார்த்தைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதால் பலரின் எதிர்ப்பையும் இந்த பாடல் பெற்றது.
இதனால், படக்குழுவினர் பாடலின் வீடியோவில் ”புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்” என்ற வாசகத்தை புதிதாக இன்று இணைத்துள்ளது.