பிரமாண்ட ஏற்பாட்டில் “லால் சலாம்” இசை வெளியீடு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம்.
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இதன் இசை வெளியீட்டு விழாவை வரும் 21 ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இவ்விழாவிற்கு ரஜினிகாந்தும் வர இருப்பதால், விழாவை பெரிய அளவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.