ரசிகர்களை நான் பார்க்க வேண்டும்; தீவிர ஆலோசனையில் விஜய்!

 ரசிகர்களை நான் பார்க்க வேண்டும்; தீவிர ஆலோசனையில் விஜய்!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில்நடித்து வருகிறார். காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது இப்படத்திற்கு.

இதனால் உற்சாகத்தில் இருக்கும் படக்குழு, படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறது.

அதற்காக, இம்முறை மதுரை அல்லது திருச்சியில் இசை வெளியீட்டு விழாவை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் அனைவரையும் நான் பார்க்க வேண்டும். ஆகவே, ஓபன் கிரெளண்டில் இசை வெளியீட்டு விழாவை நாம் நடத்தலாம் என்று விஜய் கூறி வருகிறாராம்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post