லியோ வெற்றி விழாவில் விஜய்க்கு எதிராக எழுந்த குரல்!
நேற்று லியோ வெற்றி விழாவில் வழக்கம்போல் குட்டி கதை ஒன்றை சொன்னார் நடிகர் விஜய். ”ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது.
தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! ” என்று பேசினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் ஒருபுறம் வைரலாக , ஆடியோ லாஞ்ச் நடைபெறும் நேரு உள்விளையாட்டுக்கு வெளியே சிலர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினார்கள்.
அதாவது விஜய் அப்பா – மகன் என்று ஆளும் அரசாங்கத்தை குறித்து பேசியதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.