நீங்கள் ஆணையிடுங்கள்.. நான் செய்கிறேன் – விஜய்!
லியோ வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் பேசும் போது,
”புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான்
நடிகர் திலகம்னா ஒருத்தர் தான்
புரட்சி கலைஞர்னா ஒருத்தர் தான்
அதே மாதிரி,
உலக நாயகன்னா ஒருத்தர் தான்
சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான்
தலனா.. ஒருத்தர் தான்
நீங்கள் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்..” என்று கூற அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.
இதனால், அரசியலில் விஜய் விரைவில் வரப்போகிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பலர் கூறி வருகின்றனர்.