3 நாட்களில் மாவீரனின் வசூல் நிலவரம்!

 3 நாட்களில் மாவீரனின் வசூல் நிலவரம்!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”.

படம் வெளியான முதல்நாளிலேயே குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து நல்லதொரு விமர்சனத்தை பெறத் துவங்கியது.

இதனால், வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

முதல் நாளில் மட்டும் 8 முதல் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது என்ற தகவல் வரத் துவங்கியது.

தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 35 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், தோராயமான பார்வையில் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் 100 கோடி கிளப்பில் மாவீரன் படமும் நிச்சயம் இணையும் என்கிறார்கள்.

 

Related post