கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

 கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

ஹீரோவாக இருந்து கொண்டு வில்லனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர், விஜய்யுடன் மாஸ்டன், கமலுடன் விக்ரம், தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு வலுவான கதையில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “சர்தார்”. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது.

இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறது படக்குழு. கதையை கேட்ட விஜய்சேதுபதி ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post