இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன விக்னேஷ் சிவன் நயன்தாரா

 இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன விக்னேஷ் சிவன் நயன்தாரா

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.

இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர்கள் ஆகி இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்

சமூக வலைதளங்களில் அதிகம் இப்புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை இவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்..

திருமணம் ஆகி 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில் பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என்று இவர்கள் கூறியது ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது..

 

Related post