சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சரத்குமார்!!

 சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சரத்குமார்!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் ,பார்த்திபன் , பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படம் வெளியான தினத்தில் இருந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் வசூலிலும் சக்கை போடு போடுகிறது.

இப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்த சரத்குமாரின் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் பாராட்டினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார் சரத்குமார். சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் உடன் இருந்தார்.

 

Related post