கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு.. திருமணத்தில் முடியப் போகும் “விக்னேஷ் சிவன் – நயன்தாரா” காதல்!

 கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு.. திருமணத்தில் முடியப் போகும் “விக்னேஷ் சிவன் – நயன்தாரா” காதல்!

சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது.

இந்த காதல் என்று திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலர் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கான பதில் இன்று கிடைத்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்” . படம் வெளியான பிறகு கோயில் கோயிலாக சுற்றி சாமி தரிசனம் செய்து வந்தனர் காதலர்கள் இருவரும்.

இந்நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வரும் ஜூன்-9 தேதி திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் திருமண இடத்திற்கு முன்பதிவை இன்று அவர்கள் செய்துள்ளனர். – அதற்காக நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று திருப்பதி சென்றுள்ளனர்.

Related post