தலைவர் 171”; அப்போ லோகேஷ் இல்லையா.?

 தலைவர் 171”; அப்போ லோகேஷ் இல்லையா.?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது..

இந்நிலையில், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த படங்களை முடித்ததும், ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் தொடங்கும் என்கிறார்கள்., இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அந்த படத்தை கமல் தயாரிப்பார் என்றும் தகவல் வேகமாக பரவி வந்த நிலையில், ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறது ஹும்பாளே நிறுவனம்.. இந்த நிறுவனம் கே ஜி எஃப் மற்றும் காந்தாரா படங்களை தயாரித்திருந்தது.

சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பில் இயக்குனர் சுதா கொங்கராவும் உடன் இருந்தார் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தான் சுதா கொங்கரா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

லோகேஷுக்கு பதிலாக சுதா தான் தலைவர் 171வது படத்தை இயக்குவார் என்கிறார்கள்.

 

Related post