பிரமாண்டமாக நடைபெற்ற “பொன்னியின் செல்வன் 2” இசை வெளியீட்டு விழா!

 பிரமாண்டமாக நடைபெற்ற “பொன்னியின் செல்வன் 2” இசை வெளியீட்டு விழா!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது.

இந்நிலையில், இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் கலந்து கொண்டனர்.

இசையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். லைகா நிறுவனம் இப்படத்தினை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

 

Related post