மாஸ் காட்டும் விடுதலை டிக்கெட் புக்கிங்!

 மாஸ் காட்டும் விடுதலை டிக்கெட் புக்கிங்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை.

இப்படத்தின் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் அதிவேகமாக நிரம்பி வருகிறது.

வெற்றிமாறனின் இயக்கம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பதால் மேலும் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.

அதீத எதிர்பார்ப்பில் நாளை இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

 

Related post