லால் சலாம் படத்தில் ரஜினியின் லுக்… கேலியும் கிண்டலும்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வர, உருவாகி வரும் படம் தான் லால் சலாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு பாத்திரமாக தோன்றவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதற்காக, இவரின் லுக் மற்றும் பெயர் என்ன என்பதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் இவரது பெயர், மொய்தீன் பாய் என்று கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரானது சரியாக எடிட் செய்யாமல், வெளியிட்டது போன்று தெரிகிறது. இதனால், இந்த போஸ்டரை பலரும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாரை இப்படி ஒரு மட்டமான போட்டோஷாப் செய்து போஸ்டர் வெளியிட வேண்டுமா.? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. இருந்தாலும் தங்கம் தங்கம்தானே என்று ரசிகர்கள் பலர் இப்போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

 

Related post