லால் சலாம் பட டப்பிங்கை முடித்த ரஜினி; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கிறார்.
லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்தின் டப்பிங்க் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
”மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” என்று ரஜினி பேசும் வசனம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.