மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; எல்லை மீறி போகும் விஜய் ரசிகர்கள்!

 மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; எல்லை மீறி போகும் விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின்.

சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் ”தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்” என்றார்.

விஜய்யை தளபதி என்றே அழையுங்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்ட நிலையில், ஒருமையில் மிஷ்கின் பேசிவிட்டதாக இணையத்தில் பலரும் மிஷ்கினை திட்டிய வண்ணம் இருந்தனர்.

இதற்கெல்லாம் எல்லை மீறி செல்லும் விதமாக சில விஜய் ரசிகர்கள், மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டனர்.

இது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரே இந்த போஸ்டரை ஷேர் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விஜய் ரசிகர்களின் இந்த செயலால், பலரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டனர்.

Spread the love

Related post