விஜய்யிடம் ஆர் ஜே பாலாஜி சொன்ன பான் இந்தியா கதை… காத்திருக்கும் ரசிகர்கள்!

 விஜய்யிடம் ஆர் ஜே பாலாஜி சொன்ன பான் இந்தியா கதை… காத்திருக்கும் ரசிகர்கள்!
Digiqole ad

எல் கே ஜி , மூக்குத்தி அம்மன் படங்களைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கிய படம் தான் “வீட்ல விசேஷம்”. இப்படம், குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நன்றி சொல்லும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஆர் ஜே பாலாஜி.

அப்போது அவர் கூறியதாவது, “தொடர்ந்து இது போன்ற குடும்ப பாங்கான படங்களை இயக்கவே தயாராக இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, அவரிடம் ஒரு கதை கூறினேன். படத்தின் கதை அவருக்கு பிடித்து போனது. கதையை டெவலப் செய்ய எத்தனை மாதங்கள் ஆகும் எனக் கேட்டார். ஒரு வருடங்களாவது எடுத்துக் கொள்ளும் என்று கூறினேன். அது ஒரு பான் இந்தியா கதை, பெரிய பொருட்செலவில் எடுக்கக் கூடிய படமாகும்.

ஒரு வருடமோ இரு வருடமோ ஆகலாம், நான் விஜய் சாரோடு படம் இயக்குவதற்கு. அவர் எப்போது அழைப்பாரோ அப்போது நான் படம் இயக்க செல்வேன்.” என்று கூறினார்.

 

Digiqole ad
Spread the love

Related post